ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த ஆம்னி பேருந்து பறிமுதல்
திருத்தணி அருகே சோதனை சாவடியில் ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த ஆம்னி பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது. பொன்பாடி சோதனைச் சாவடியில் அதிகாரிகள் தணிக்கையில் ஈடுபட்டபோது ஆந்திர மாநில ஆம்னி பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இருக்கை விவரங்களை தவறாக அளித்து தமிழ்நாடு அரசுக்கு குறைவான வரியை ஆன்லைனில் செலுத்தி இயக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இருக்கை விவரங்களை தவறாக அளித்து, வரி செலுத்தியதற்காக ஆம்னி பேருந்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.