விசைப்படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் பலி
திருவள்ளூர் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது விசைப்படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் மணி (53) பலியாகினார். காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 70 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீனவர் மணி மீன்பிடித்துக் கொண்டிருந்தார். சக மீனவர்கள் மணியின் சடலத்தை கைப்பற்றி கரைக்கு கொண்டுவந்தனர், மீன்பிடி துறைமுக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.