“பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சட்டம்” இயற்ற கோரி ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திருப்பத்தூர் பத்திரிகையாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் “பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சட்டம்” இயற்ற கோரி ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் பத்திரிகையாளர் சங்க தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சரவணன், பொருளாளர் முனீர்பீரான், துணை செயலாளர் அலாவுதீன், செயற்குழு உறுப்பினர்கள் அருண்குமார், தினேஷ்குமார், சதிஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.