பிரதமர் மோடி வங்கதேசம் வர வேண்டும்
பிரதமர் மோடி வங்கதேசம் வர வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்துள்ளார்.
வங்கதேசத்தவர்களுக்கு மின்னணு முறையில் மருத்துவ விசா மற்றும் அந்நாட்டில் மற்றொரு தூதரக அலுவலகம் திறக்கப்படும் என பிரதமர் மோடி கூறினார்.
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதமர் மோடியை சந்தித்து இரு தரப்பு உறவுகள் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து இரு தலைவர்கள் முன்னிலையில் டிஜிட்டல் டொமைன், பசுமை ஒத்துழைப்பு, கடலோர பாதுகாப்பு மற்றும் நீலப்புரட்சி ரயில்வே ஆகிய துறைகளில் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.பிறகு இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.