கன்னியாகுமரி கடந்த 2 நாளாக பெய்த தொடர் மழை
கன்னியாகுமரி கடந்த 2 நாளாக பெய்த தொடர் மழையால், நாகர்கோவில் அருகே உள்ள புல்லுவிளையில் பொன்னுசாமி என்பவரின் வீடு இடிந்து விழுந்தது. வீட்டில் பாக்கியவதி (72) என்ற மூதாட்டி சிக்கினார். வெளியே வரமுடியாமல் விடிய விடிய தவித்தார். இது குறித்து இன்று காலை தீயணைப்பு துறைக்கு அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யகுமார் உத்தரவின் பேரில், உதவி கோட்ட அலுவலர் துரை தலைமையில் தீயணைப்பு துறையினர் சென்று அந்த மூதாட்டியை மீட்டனர்