கடத்தி வரப்பட்ட ரூ.1.67 கோடி மதிப்புள்ள தங்கம்
சென்னை: வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.67 கோடி மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. 2.66 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் மலேசிய பெண் பயணி உட்பட 2 பேரை கைது செய்தனர். ஒரு கிலோ தங்கப் பசையை விமான நிலையத்திலேயே போட்டுவிட்டு தப்பிய அபுதாபி பயணிக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.