ஆன்லைன் ஆர்டரில் மோசடி..!
திருப்பூர் கே.வி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 402 ரூபாய் மதிப்புள்ள இயர் ஃபோன் ஒன்றை ஆன்லைனில் ஆர்டர் செய்த நிலையில் அவருக்கு வந்த பார்சலை பிரித்ததில் 30 ரூபாய் மதிப்புள்ள பல்பொடி டப்பா இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்த நிலையில் ஆர்டர் செய்த பொருள் மாற்றி வந்ததால் அதனை திருப்பி அனுப்ப முடியாமல் தவித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த மோசடி சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது