குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பலி
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது. நேற்று நண்பகல் 12 மணியளவில் 50 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் குழந்தை தவறி விழுந்தது. 17 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அதிகாலை 5 மணி அளவில் குழந்தை மீட்கப்பட்ட நிலையில் மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.