அடகு கடையில் போலி நகைகளை கொடுத்து ரூ.2.95 லட்சம் மோசடி
திருவல்லிக்கேணியில் அடகு கடையில் போலி நகைகளை கொடுத்து ரூ.2.95 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. அடகு கடை உரிமையாளர் நிமேஷ் சோலங்கியிடம் 53 கிராம் தங்க செயின் என போலி நகையை கொடுத்து மோசடி செய்துள்ளனர். அடகு கடை உரிமையாளரிடம் ரூ.2.95 லட்சத்தை மோசடி செய்து வாங்கி விட்டு தப்பிய பசில் என்பவருக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்