விருத்தாசலம்- முஷ்ணம் காலிக்குடங்களுடன்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே ராஜேந்திரப்பட்டினம் ஊராட்சிக்குட்பட்ட சின்னாத்துக்குறிச்சியில் குடிநீர் தட்டுப்பாட்டால் இன்று காலை விருத்தாசலம்- முஷ்ணம் நெடுஞ்சாலையில் சின்னாத்துக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் காலிக்குடங்களுடன் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட னர். அதிகாரிகளின் சமரசத்தை அடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.