திருப்பூர் மடத்தூர் சுற்றுவட்டார ஆய்வு

திருப்பூர் மடத்தூர் சுற்றுவட்டார பகுதியில் பதிற்றுப்பத்து பாடல்களில் குறிப்பிடப்படும் பகுதிக்கு அருகில் காணப்படும் பெருங்கற்கால கல் வட்டங்கள் குறித்து வரலாற்று நடுவத்தினர் ஆய்வு மேற்கொண்டனர். மடத்துக்குளம் சங்கராமநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மடத்தூர், மயிலாபுரம் பகுதிகள் உள்ளன. இங்கு 20 க்கும் மேற்பட்ட பெருங்கற்கால கல்வட்டங்கள் சிதிலமடைந்து கிடக்கின்றன. இதனை தொல்லியல் ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி மற்றும் வி.கே.சிவகுமார், அருட்செல்வன், பாலு ஆகியோர் ஆய்வு செய்தனர்.