சிறு சிறு நீரோடைகளில் மழைநீர்

நீலகிரி முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பகாடு, மசினகுடி, மாயார், சீகூர் வனப்பகுதிகளிலும் அடிக்கடி மழை பெய்து வருவதால், வறண்டு கிடந்த நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது. மாயாற்றிலும் நீர்வரத்து துவங்கியுள்ளது. இதனால், சிறு சிறு நீரோடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இதன் காரணமாக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி பசுமைக்கு திரும்பி உள்ளது. இதனால், சாலையோரங்களில் மான் கூட்டங்கள், மயில்கள், காட்டு யானைகள் உள்ளிட்டவைகள் மேய்ச்சலில் ஈடுபட்டு வருகின்றன.