361 தேர்வு கூடங்களில் தேர்வுகள் நடைபெற்றது
சேலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடைபெறும் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தொகுதி 4 தேர்வினை மாவட்டத்தில் உள்ள 13 வட்டங்களுக்கு உட்பட்ட 270 தேர்வு மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 361 தேர்வு கூடங்களில் தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வானது காலை 9:30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்றது. தேர்வு எழுதுபவர்கள் காலை 9 மணிக்குள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஒன்பது மணிக்கு மேல் வருகை தருபவர்களை தேர்வு மையத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.