மைக்கை பார்த்தா அண்ணாமலைக்கு வலிப்பு வந்திடுது
மைக்கை பார்த்தா அண்ணாமலைக்கு வலிப்பு வந்திடுது;
எலுமிச்சைபழத்தை தலையில் தேய்ச்சா சரியாகிடும்
– எஸ்.வி.சேகர்
‘’தமிழகத்தில் மக்களவை தேர்தலில் பாஜக தோல்விக்கு 100 சதவிகிதம் அண்ணாமலைதான் காரணம். அதற்கு காரணம், ஒரு போலீஸ் ஸ்டேஷனை நடத்துற மாதிரியே கட்சியை நடத்திட்டார் அண்ணாமலை. அவர் பாஜகவில் சேர்ந்தபோது என்னை வந்து சந்தித்து ஆசி வாங்கிவிட்டு சென்றார். ஆனால் இன்றைக்கு என்னை யார் என்றே தெரியவில்லை என்கிறார். ஆனால், என்னை மோடிக்கு தெரியும். அந்த மோடியே இன்னும் கொஞ்ச நாளில் அண்ணாமலையை யார் என்றே தெரியாது என்று சொல்லிவிடுவார்’’
சிலருக்கு சில நேரம் அதிர்ச்சியில் அம்னீஷியா வந்துவிடும். வெயில் அதிகம் என்பதால் அரைமூடி எலுமிச்சை பழத்தை வாங்கி தேய்த்தால் சரியாகிவிடும். அதனால் அவரை யாரும் தொந்தரவு செய்யாமல் இருக்கணும்’’
’’சில பேருக்கு மைக்கை பார்த்தால் வலுப்பு வந்திடும். பேச்செல்லாம் உளறலா கொட்டும். அதனால் தம்பி அண்ணாமலை கொஞ்சம் ஹெல்த்தை பார்த்துக்கொள்வது நல்லது’’என்று விமர்சித்துள்ளார்.
வாக்கு சதவிகிதம் உயர்ந்திருக்கிறது என்று தோல்வியை சமாளிக்கும் அண்ணாமலைக்கு, ‘’ஒரு வாக்கில் தோற்றாலும் தோற்றது தோற்றதுதான். பாஜக தமிழ்நாட்டில் வாஷ் அவுட். இதுதான் உண்மை.
தமிழகத்தில் பாஜக வாக்கு வங்கி உயர்ந்திருக்கிறது என்று அண்ணாமலை சொல்வது பொய். வெட்கமே இல்லாமல் பொய் சொல்ல முடியும் என்றால் அது அண்ணாமலையால் மட்டும்தான் முடியும். 21 தொகுதிகளில்தான் நின்றிருக்கிறது பாஜக . மீதமுள்ள 19 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் நின்றுள்ளன. பாஜக வாங்கிய வாக்குகள் பாஜக வாக்குகள் மட்டும் அல்ல. அதில் பாமக , தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சி வாக்குகள் எல்லாம் இருக்குது. இதையெல்லாம் கழித்துவிட்டால் மறுபடியும் 4% வாக்குகள்தான் கணக்கில் வரும்’’என்றார்.