அரசு பள்ளி திறந்த அன்றே மாணவர்களுக்கு பாட புத்தகம்
அரசு பள்ளி திறந்த அன்றே மாணவர்களுக்கு பாட புத்தகம் நோட்டு மற்ற பொருட்கள் வழங்கப்படும்
2024-25ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவிபெறும், பகுதி நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்படும் ஜூன் 10ஆம் தேதி அன்றே பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம் மற்றும் புவியியல் வரைபடம் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பாடப்புத்தகம் 70,67,094 மாணவர்களுக்கும் நோட்டுப்புத்தகம் 60,75,315 மாணவர்களுக்கும், புவியியல் வரைபடம் 8,22,603 மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது