தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

தபால் வாக்கு எண்ணிக்கை – தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

▪️ தபால் வாக்குகள் சரியாக காலை 8 மணிக்கு எண்ணத் தொடங்கப்படும். கட்சி முகவர்களுக்கு எண்ணிக்கை தெரிவிக்கப்படும். அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தபால் வாக்கு எண்ணிக்கையும் சேர்த்து முடிவுகள் அறிவிக்கப்படும்

▪️ தபால் வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கினாலும், 8.30 மணிக்கு மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்

▪️ ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு பிறகும் தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் பார்வையாளர் கையொப்பமிட்ட பிறகு அதிகாரப்பூர்வமாக எண்ணிக்கை அறிவிக்கப்படும்

▪️ 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குகளை எண்ண அதிக மேஜைகள் போடப்பட்டுள்ளது. அதன்படி, சோழிங்கநல்லூர் 30, கவுண்டம்பாளையம் 20, பல்லடம் 18 மேஜைகள் அமைப்பு. மற்ற அனைத்து இடங்களிலும்14 மேஜைகள் அமைப்பு