கேரளாவில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
கேரளாவில் இன்று முதல் 5 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் நாளை முதல் 4 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் நாளை முதல் 4 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.