தாய்ப்பாலை சட்டவிரோதமாக பாட்டில்களில் அடைத்து விற்ற கடைக்கு சீல் வைப்பு..
சென்னை மாநகரத்தில் சட்டவிரோதமாக பாட்டில்களில் தாய்ப்பால் விற்ற முத்தையா என்பவரின் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தாய்ப்பாலை காசுக்கு விற்பனை செய்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஆன்லைனிலும் தாய்ப்பால் விற்பனை நடைபெற்று வருவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் சென்னையில் தாய்ப்பால் விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மதாவரத்தில் முத்தையா என்பவர் புரதச்சத்து மருந்துகள் விற்பனை செய்து வந்துள்ளார்.
இதையடுத்து பாட்டில்களில் தாய்ப்பால் அடைத்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து அதிகாரிகள் கடையில் சோதனை நடத்தினர். புரதச்சத்து மருந்துகள் விற்பனை செய்ய மட்டுமே கடைக்கு உரிமம் தரப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், தாய்ப்பால் விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கஸ்தூரி நடவடிக்கை எடுத்துள்ளார்.