குமரியில் கனமழை எதிரொலி : ரப்பர் பால் வெட்டும் தொழில் நிறுத்தம்
குமரி மாவட்டத்தில் உள்ள தடிக்காரகோணம், வாழையத்து வயல், கீரிப்பாறையில் கனமழையால் ரப்பர் பால் வெட்டும் தொழில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தடிக்காரன்கோணம், வாழையத்து வயல், கீரிப்பாறை, காளிகேசம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் விட்டு விட்டு கனமழை பெய்தது. கனமழையால் பறக்கை பகுதியில் மரம் சாலையின் நடுவில் முறிந்து விழுந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது