வனத்துறை தடை விதித்துள்ளது
நாமக்கல்: தொடர் மழை காரணமாக கொல்லிமலை அருவிகளில் குளிப்பதற்கு நாளை (மே-23)வரை வனத்துறை தடை விதித்துள்ளது.
மாசிலா அருவி, நம்ம அருவி, ஆகாய கங்கை அருவி உள்ளிடவற்றிற்கு செல்லவும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்த நிலையில் வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.