மூளைச்சாவு அடைந்த டீ மாஸ்டர் மனைவியின் உடல் உறுப்புகள் தானம்
வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த டீ மாஸ்டர் மனைவியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. உடல் உறுப்புகள் தானம் செய்த டீ மாஸ்டர் மனைவி சத்யாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. கடந்த 17-ம் தேதி வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சத்யா மூளைச்சாவு அடைந்தார். சத்யாவின் இருதயம் மற்றும் நுரையீரல் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.