தமிழ்நாடு என்றாலே மோடிக்கு வெறுப்பு!

ஒடிசாவில் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன்.

ஒடிசாவின் பின்தங்கிய பகுதிகளில் பணியாற்றி வளர்ச்சித் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியவர்.

ஒடிசாவில் தொழில் வளர்ச்சி முதல் அடிப்படை கட்டமைப்புகள் வரை ஏற்படுத்த காரணமாக இருந்தவர். அதனால் தான் வி.கே.பாண்டியன் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் இதயத்தில் இடம் பிடித்தார்.

பிஜு ஜனதா தளத்தில் சில மூத்த தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி கட்சிப் பணிகளில் வி.கே.பாண்டியனை பிஜு பட்நாயக் ஈடுபடுத்தி வருகிறார். இதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியன் ஐஏஎஸ் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாக திகழும் பாண்டியன், பாஜகவை ஒடிசாவில் காலூன்ற முடியாத அளவுக்கு வியூகங்களை அமைத்தார்.

இது பாஜகவுக்கு பயத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவு தான் ஒடிசாவில் மோடி கக்கிய விஷம்.

பூரி ஜெகநாதர் கோயில் சாவி தமிழ்நாட்டுக்கு போய்விட்டதாம். ஒடிசாவிலிருந்து எல்லாவற்றையும் கொள்ளையடித்து தமிழ்நாட்டுக்கு கொண்டு சென்றுவிட்டாராம் பி.கே.பாண்டியன்.

இதுவரை ஒரு குற்றச்சாட்டு கூட இல்லாமல் சிறப்பாக பணியாற்றி ஒடிசா மக்களின் இதயத்தில் இடம் பிடித்தவர் பி.கே.பாண்டியன். அவர் மீது அவதூறு கூறுவதன் மூலம் தமிழ்நாட்டையும் அசிங்கப்படுத்த பிரதமர் முயன்றிருக்கிறார்.

தமிழ்நாட்டின் மீதும் தமிழர்கள் மீதும் எவ்வளவு வெறுப்புணர்வு இருந்தால், பிரதமர் மோடி இவ்வாறு பேசியிருப்பார்? தமிழ்நாடு, ஒடிசா மட்டுமல்ல…ஒட்டுமொத்த இந்தியாவே மோடியை வீட்டுக்கு அனுப்பப் போகிறது.

இந்த உண்மை மோடிக்கும் தெரியும். அதனால் அவரது உளறல் உச்சத்தை எட்டியிருக்கிறது.