சென்னை விமான நிலையத்தில்
துபாய் மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து விமானங்களில், சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.1.08 கோடி மதிப்புடைய, 1.65 கிலோ தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.
காலில் அணிந்திருந்த ஷூக்களில் மறைத்து வைத்திருந்த தங்கப் பசை, மற்றும் கவரிங் நகைகள் என்று கூறி, கடத்தி வந்த தங்க நகைகளை, பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், பெண் உட்பட இரண்டு பயணிகளை கைது செய்து விசாரணை.