துவரங்குறிச்சி அருகே குளம்போல் தேங்கிய மழை நீரால் விபத்து அபாயம்
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தெத்தூர், மருதம்பட்டி, உசிலம்பட்டி, செல்லக்கூடிய தெத்தூர் விளக்கு பகுதி உள்ளது. இப்பகுதி திருச்சி மாவட்டத்தின் கடைசி எல்லையாகும். இங்கு அடிக்கடி விபத்துக்கள் நடந்து உயிர் சேதங்களும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் பெய்த மழையால் தண்ணீர் வடியாமல் தெத்தூர் செல்லும் சாலை தாழ்வான பகுதி என்பதால் அங்கு மழைநீர் குளம்போல் தேங்கியது.