தமிழகத்தில் 4 நாள்கள் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல் சின்னம்: தமிழகத்தில் 4 நாள்கள் கனமழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடலில் நாளை புயல்சின்னம் (காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி) உருவாகிறது. புயல் தமிழக கடலோரத்தை நெருங்கியே செல்லும் என்பதால், அடுத்த 4 நாள்களுக்கு பரவலாக கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.