அரசின் வேளாண் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்

லால்குடி அருகே வேளாண்மை மூலம் அரசு தரும் திட்டங்கள் குறித்து விவசாய சங்க நிர்வாகிகளுக்கு விவசாய சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் விளக்கி கூறினார். லால்குடிஒ ன்றியம் மேலவாழை கிராமத்தில் விவசாய சங்க கூட்டம் நடைபெற்றது. லால்குடி நகர தலைவர் குணசீலன், துணைத் தலைவர் கருவரதன், ஒன்றிய துணைத் தலைவர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில் புதிய சங்க நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கினார்.