பக்தர்களின் கூட்டம் அலைமோதல்
தொடர் விடுமுறையால் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதல்
தொடர் விடுமுறையால் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. 5 கி.மீ. நீள வரிசையில் 24 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகினற்னர். நேற்று ஒரே நாளில் 71,510 பேர் சாமி தரிசனம் செய்து ரூ.3.63 கோடி உண்டியல் காணிக்கை பெறப்பட்டுள்ளது.
டோக்கன் பெறாமல் கோயிலுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளதால் 24 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வைகுண்டம் காம்ப்ளக்ஸில் உள்ள 31 காத்திருப்பு அறைகளும் நிரம்பியதால், 5 கி.மீ. தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.