பிரதமர் மோடி கண்டனம்

ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: பிரதமர் மோடி கண்டனம்

ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர் ஃபிகோ மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமராக ராபர்ட் பிகோ(59) பதவி வகித்து வருகிறார். இவர் நேற்று தலைநகரில் இருந்து 150கிமீ தொலைவில் உள்ள ஹண்ட்லோவா நகரில் உள்ள கலாச்சார மையத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் வௌியே வந்த ராபர்ட் பிகோ செய்தியாளர்களை சந்தித்து கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் நான்கு முறை தொடர்ந்து சுட்டதில் பிரதமர் ராபர்ட் பிகோவின் வயிற்றில் குண்டு பாய்ந்தது.