தைவான் எல்லையில் சீனாவால் பதற்றம்
தைவான், சீனா இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில், தைவானின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் சீன ராணுவத்தின் அடாவடி நடவடிக்கைகளை தினசரி அறிக்கையாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இன்று அதிகாலை 6 மணியளவில் 27 சீன போர் விமானங்களும், 7 ராணுவ கப்பல்களும் எல்லையை கடந்து வந்ததாக தெரிவித்துள்ளது. இதனால், இருநாட்டு எல்லையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.