கட்சி தாவியவர்களை நம்பி களமிறங்கிய பாஜக!
மக்களவை தேர்தலில் களம் காணும் 435 தொகுதிகளில், 106 தொகுதிகளில், மற்ற கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைந்தவர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளன.அதிகபட்சமாக ஆந்திராவில் போட்டியிடும் 6 பாஜக வேட்பாளர்களில் 5 பேர் வேறு கட்சியில் இருந்து வந்தவர்கள். தெலங்கானாவில் 17 பேரில் 11 வேட்பாளர்கள் பிற கட்சிகளில் இருந்து பாஜகவுக்கு தாவியவர்கள்.பாஜகவுக்கு பலம் வாய்ந்த இடமாக கருதப்படும் உத்தரப் பிரதேசத்தில் கூட பிற கட்சிகளில் இருந்து வந்த 23 வேட்பாளர்களை நம்பி களம் காண்கிறது.