ஐதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்கு
ஐதராபாத் தொகுதி பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இஸ்லாமிய பெண் வாக்காளர்களை புர்காவை அகற்றச் சொல்லியதால் சர்ச்சை ஏற்பட்டது. இஸ்லாமிய வாக்காளர்களின் புர்காவை அகற்றச் சொல்லி முக அடையாளங்களை மாதவி லதா சரிபார்த்ததால் சர்ச்சை ஏற்பட்டது. ஏற்கனவே மாதவி லதா பிரச்சாரத்தின்போது மசூதியை நோக்கி அம்பை எய்வது போல் செய்கை செய்ததால் வழக்கில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.