வாக்குப் பதிவு தொடங்கியது
4-ஆம் கட்ட மக்களவைத் தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!
95 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதி என மொத்தம் 96 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு தொடங்கியது.
மக்களவைத் தோ்தலில் 4-ஆம் கட்டமாக ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா உள்ளிட்ட 9 மாநிலங்களில் 95 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதி என மொத்தம் 96 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு தொடங்கியது.
ஆந்திரத்தில் 25, தெலங்கானாவில் 17, உத்தர பிரதேசத்தில் 13, மகாராஷ்டிரத்தில் 11, மேற்கு வங்கம், மத்திய பிரதேசத்தில் தலா 8, பிகாரில் 5, ஜாா்க்கண்ட், ஒடிஸாவில் தலா 4 தொகுதிகளுக்கு மற்றும் ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகா் தொகுதிக்கு இன்றும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.