எம்பி செல்வராஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு
மறைந்த நாகை எம்பி செல்வராஜ் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு
மறைந்த நாகை எம்பி செல்வராஜ் கட்சியில் பல பெரிய பொறுப்பு, பதவிகளில் இருந்தபோதும், கடைசி வரை மக்கள் தொண்டராக இருந்தவர்.
7 முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு 4 முறை (1989, 1996, 1998, 2019) எம்பியாக தேர்வானவர்.
அவரின் இறுதிச் சடங்கு சித்தமல்லி கிராமத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் என்றும் தமிழக முழுவதும் செங்கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் இந்திய கம்யூ., அறிவித்துள்ளது.