ஹைதராபாத் அபார வெற்றி
9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி
ஐபிஎல் போட்டியின் 57-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை வீழ்த்தியது.
முதலில் லக்னௌ 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் சோ்க்க, ஹைதராபாத் 9.4 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 167 ரன்கள் விளாசி வென்றது. இதன் மூலம் ரன்ரேட்டை அதிகரித்துக்கொண்ட ஹைதராபாத், புள்ளிகள் பட்டியலில் முன்னேறி, பிளே-ஆஃபுக்கு முன்னேறுவதற்கான நம்பிக்கையை தக்கவைத்துக்கொண்டுள்ளது.