வெப்பத்தை சமாளிக்க ஓ.ஆர்.எஸ்.கரைசல்

பெரம்பலூர் மாவட்டத்தில் 20 இடங்களில் பொதுமக்களுக்கு வெப்பத்தை சமாளிக்க ஓ.ஆர்.எஸ்.கரைசல்

பெரம்பலூர் மாவட்ட அளவில் வெப்பத்தை சமாளிக்க 20 இடங்களில் பொதுமக்களுக்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பொது மக்களிடத்தில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.பெரம்பலூர் மாவட்ட அளவி லான காலநிலை மாற்றக் குழுக் கூட்டம் மாவட்டக் கலெக்டர் கற்பகம் தலை மையில் நேற்று (7ஆம் தேதி) பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.