குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டில் 489 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

 சேலம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 489 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. குழந்தை திருமணம் நடைபெறுவது கண்டறியப்பட்டால் 2 வருடம் சிறை, ₹1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குழந்தை திருமண சட்டம் 2006ன் படி, 18 வயது நிறைவடையாத பெண்ணும், 21 வயது நிறைவடையாத ஆணும் செய்யும் திருமணம் குழந்தை திருமணமாக கருதப்படுகிறது