உலக பத்திரிகை சுதந்திர நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
உலக பத்திரிகை சுதந்திர நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: 1992ல் வின்ட்ஹோக்கில் ஆப்பிரிக்க நாளிதழ் செய்தியாளர்கள் ஒன்றிணைந்து பத்திரிகை சுதந்திரம் குறித்து வெளியிட்ட அறிக்கையின் நினைவாக, மே 3ம் நாளை ஐக்கிய நாடுகள் அவையின் பொதுப்பேரவை ’உலக பத்திரிகை சுதந்திர நாள்’ ஆக 1993ம் ஆண்டு பிரகடனப்படுத்தியது. இந்நாள் பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை வளர்க்க பயன்படுகிறது.