இந்திய விமான நிலைய ஆணையம் எச்சரிக்கை
சென்னை விமான நிலையத்தில் இரவு நேரத்தில் தரையிறங்க வரும் விமானங்களின் மீது லேசர் லைட் ஒளி அடிக்கும் மர்ம நபர்கள்: இந்திய விமான நிலைய ஆணையம் எச்சரிக்கை
சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தரையிறங்க வரும் விமானங்களின் மீது லேசர் லைட் ஒளி அடிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதால், இந்த செயலில் ஈடுபடும் விஷமிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய விமான நிலைய ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளாக, வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வந்து தரையிறங்கும் விமானங்கள், ஓடுபாதையில் தரை இறங்குவதற்காக தாழ்வாக பறக்கும் போது, விமானத்தை நோக்கி லேசர் லைட் ஒளி அடிப்பது அவ்வப்போது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த லேசர் லைட் ஒளி சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் என்று மாறுபட்ட கலர்களில் அவ்வப்போது ஒளிரச் செய்யப்படுகிறது. இது விமான போக்குவரத்துக்கு மிகவும் ஆபத்தானது.