முதல்வர் ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி
பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையின் கைதை எதிர்த்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி
பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையின் கைதை எதிர்த்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி 31ல் கைது செய்யப்பட்டார். சட்டவிரோத கைதுக்கு எதிராக ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஜார்க்கண்ட் நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. இதற்கிடையே, உச்சநீதிமன்றத்தில் ஹேமந்த் சோரனின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கலாம் என தெளிவுபடுத்தியது.