உணவக உரிமையாளரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது
பட்டினப்பாக்கத்தில் காருக்கு வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில் உணவக உரிமையாளரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது
சென்னை பட்டினப்பாக்கத்தில் காருக்கு வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில் உணவக உரிமையாளரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார். ராயபுரத்தைச் சேர்ந்த உணவக உரிமையாளர் மணிவண்ணனை, மதுபோதையில் தாக்கிய பாஜக நிர்வாகி உள்பட 3 பேர் கைதாகினர். திருவொற்றியூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகி கார்த்திக் ராஜா, கோபி, சுடலையாண்டி ஆகியோரை போலீஸ் கைது செய்தது.
சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் நேற்று ஓஎம்ஆர் சாலையில் உள்ள தனது ஃபாஸ்ட் ஃபுட் கடைக்கு காரில் சென்று கொண்டிருந்துள்ளார். பட்டினப்பாக்கம் பகுதியில் சாலையில் சென்றபோது, முன்னாள் சென்ற கார் வழி விடாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மணிவண்ணன் தொடர்ந்து ஹாரன் ஒலி எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முன்னால் சென்ற காரில் இருந்த 4 பேர் காரை விட்டு இறங்கி வந்து, மணிவண்ணனை காரில் இருந்து இறக்கி, அவரை கடுமையாகத் தாக்கி, சட்டையைக் கிழித்து சாலையில் ஓட விட்டனர்.