மிரட்டல் விடுத்த மாவோயிஸ்டுகள்- தைரியத்தை வெளிப்படுத்திய தமிழர்கள்

மிரட்டல் விடுத்த மாவோயிஸ்டுகள்- தைரியத்தை வெளிப்படுத்திய தமிழர்கள்

கேரள மாநிலம் வயநாட்டில் தமிழர்கள் வசிக்கும் கம்பமலையில் 78.3% வாக்குப்பதிவு

கேரள மாநிலம், வயநாட்டில் தமிழர்கள் வசிக்கும் கம்பமலை பகுதியில் மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலையும் மீறி, காவல் துறையினரின் பாதுகாப்புடன் பொதுமக்கள் வாக்களித்தனர். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி போட்டியிடும் அந்த தொகுதியில், இரு தினங்களுக்கு முன்பு துப்பாக்கியுடன் வந்த 4 மாவோயிஸ்டுகள், தேர்தலில் யாரும் வாக்களிக்க கூடாது என்று பொதுமக்களை மிரட்டிச் சென்றனர்.

இதையடுத்து, பதற்றமான அந்த வாக்குச்சாவடியில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. பொதுமக்கள் அச்சமின்றி வாக்களித்ததால், அங்கு 78.3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.