மனநலம் குன்றிய மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை
மனநலம் குன்றிய மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு வாழ்நாள் சிறை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே மனநலம் குன்றிய மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அம்மாபட்டியைச் சேர்ந்த ராஜு என்பவரின் மகள், கடந்த 2020-ஆம் ஆண்டு கர்ப்பம் அடைந்தார்.
இதுகுறித்து, அவருடைய சகோதரி விசாரித்தபோது, கர்ப்பத்துக்கு தந்தை ராஜுதான் காரணம் என தெரியவந்தது. இதுதொடர்பான வழக்கு திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் இறந்து விட்டார். விசாரணை முடிந்து, தந்தை ராஜுவிற்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.