போலி ஆவணங்கள் தயார் செய்து இ-சேவை மையம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டை முதல் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (30) இவர் அரசு அனுமதியின்றி குடும்ப அட்டை, ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் என போலி ஆவணங்கள் தயார் செய்து இ-சேவை மையம் நடத்தியுள்ளார். புகாரின்படி திண்டிவனம் தனி வட்டாட்சியர் பாவேந்தன், தனி வருவாய் அலுவலர் பிரபாகரன் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு கம்ப்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து திண்டிவனம் நகர போலீசார் வழக்கு பதிந்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.