சிசிடிவி செயலிழப்பு: நீலகிரி ஆட்சியர் விளக்கம்.
உதகையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் உள்ள 173 கண்காணிப்பு கேமராக்களும் நேற்று மாலை 6.17 முதல் 6.43 வரை 26 நிமிடங்கள் செயல்படவில்லை.
உடனடியாக தொழில்நுட்ப பணியாளர்கள் மூலம் கோளாறு சரி செய்யப்பட்டது.
கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்து இருந்தாலும் பாதுகாப்பில் எந்த குறைபாடும் ஏற்படவில்லை.
எந்த விதிமீறலும் நடைபெற வாய்ப்பு இல்லை- நீலகிரி ஆட்சியர் அருணா.