கேரளாவில் இருந்து கோழி கழிவுகளை ஏற்றி வந்த வாகனம்
கன்னியாகுமரி மாவட்டம் மஞ்சாலுமூடு பகுதியில் நள்ளிரவில் கேரளாவில் இருந்து கோழி கழிவுகளை ஏற்றி வந்த வாகனத்தை துரத்திச் சென்று மடக்கி பிடித்த பொதுமக்கள். கடந்த ஒரு வார காலமாக இந்த வாகனம் அந்த வழியாக நள்ளிரவு சென்று வருவதை அப்பகுதி இளைஞர்கள் கண்காணித்து வந்த நிலையில் நள்ளிரவில் மடக்கி பிடித்தனர். மருத்துவ கழிவு மற்றும் இறைச்சி கழிவுகளை குமரி மாவட்டத்திற்குள் கொட்ட சோதனை சாவடியில் பணிபுரியும் சில போலீசார் உடந்தையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.