மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கனகராஜ்
அவதூறு கருத்துக்களைப் பரப்பும் மோடி தண்டிக்கப்பட வேண்டியவர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் சொல்லாததைக் கூறி, மக்களிடம் பொய்களை பரப்பி வரும் மோடியைத் தேர்தல் ஆணையம் தொடர்ந்து பரப்புரை செய்ய அனுமதிக்கக்கூடாது.
தேச ஒற்றுமையில் எப்போதும் அக்கறையில்லாத மோடியிடம் இந்த வார்த்தைகளை தவிர வேறு எதுவும் வராது என்றும் அவர் தெரிவித்தார்.