சென்னையில் ஏப்.28ல் மோதும் சென்னை – ஐதராபாத் அணிகள்
நாளை காலை 10.40 மணிக்கு ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடக்கம்
ரூ.1700 முதல் ரூ.6000 வரை டிக்கெட் விலை நிர்ணயம்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 28-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 46-வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நாளை காலை 10.40 மணிக்கு தொடங்கும் என சி.எஸ்.கே. நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறைந்தபட்சமாக ஆயிரத்து 700 ரூபாய் முதல் அதிகபட்சமாக ஆறாயிரம் ரூபாய் வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை PAYTM மற்றும் INSIDER இணைய பக்கங்களின் மூலமாக முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது