காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி
எனது தாய் சோனியா காந்தி நாட்டுக்காக தாலியை பறிகொடுத்தவர்: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி
காங்கிரஸ் கட்சி பெண்களின் தங்கம், தாலியை பறிக்கும் என தேர்தலுக்காக பிரதமர் மோடி பேசி வருகிறார்.
போராட்டத்தின்போது உயிரிழந்த 600 விவசாயிகளின் மனைவிகளுடைய தாலி குறித்து பிரதமர் கவலைப்பட்டாரா?
மணிப்பூரில் ஆடையின்றி பெண்கள் இழுத்துச் செல்லபட்ட போது, அவர்களின் தாலி குறித்துதான் கவலை பட்டாரா?
காங்கிரஸ் கட்சி 55 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது யாரேனும் உங்கள் தங்கத்தை, தாலியை பறித்தார்களா?
என்னுடைய பாட்டி இந்திரா காந்தி, போரின்போது இந்த நாட்டுக்காக தனது தங்கத்தை கொடுத்தார்.
எனது தாயார் நாட்டுக்காக தாலியை தியாகம் செய்தார் என்றார்.