நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்
நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு இதுவரை செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 2021-ல் ஜூலையில் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு நண்பர்களுடன் யாஷிகா ஓட்டி வந்த கார் மாமல்லபுரம் அருகே விபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த பாவனி செட்டி உயிரிழந்தார். இந்த வழக்கு செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்