திருச்சியில் இருந்து அகமதாபாத்திற்கு சிறப்பு ரயில்

தஞ்சை, மயிலாடுதுறை, விழுப்புரம், சென்னை, அரக்கோணம் வழியாக இயக்கம்

இந்த சிறப்பு ரயில் அரக்கோணம், ரெனிகுண்ட, கடப்பா, கூட்டி, மந்த்ராலயம் ரோடு, ராய்ச்சூர், புனே வழியாக செல்லும். ஜூன் மாத இறுதி வரை இந்த வாராந்திர ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது – தென்னக ரயில்வே அறிவிப்பு

அகமதாபாத் ரயில் நிலையத்தில் இருந்து ஏப்ரல் 25 தேதி முதல் ஜூன் 26 வரை காலை 9:30க்கு புறப்பட்டு சனிக்கிழமைகளில் அதிகாலை 3.45க்கு திருச்சி வந்து சேரும்.

திருச்சியில் இருந்து ஏப்ரல் 21 முதல் ஜூன் 30ம் தேதி வரை காலை 5.40க்கு புறப்பட்டு அடுத்த நாள் இரவு 9.15க்கு அகமதாபாத் ரயில் நிலையம் சென்றடையும்.

தமிழகத்தில் இந்த ரயில் தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, வைதீஸ்வரன் கோயில், சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுகம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், பெரம்பூர் மற்றும் அரக்கோணம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.